Wednesday, December 1, 2010

சாலையோரத்து மரம்

இலை உதிர்த்த உந்தன்
கிளைகளை கடக்க
நேரிடும்போதெல்லாம்
என் கண்ணுக்குள்
விவரிக்க முடியாத சோகம்!!

துளிர் விடும் உந்தன்
பசுமையை கண்களால்
வருடும்போதெல்லாம்
என் மனதுக்குள்
இனம் புரியாத குதூகலம்!!

Wednesday, November 24, 2010

பிறவிப்பயன்

உந்தன் மேனியை தழுவியபோதுதான்
எந்தன் பிறப்பின் அர்த்தம் உணர்ந்தேன்
மண்ணிடம் மழைத்துளி!!!!!

Friday, October 1, 2010

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம்..
சொந்த மண்ணில்
மனிதர்களாய்
வாழமுடியாத
ஈழத்தமிழர்களின்
தவிப்பு


பிறந்த மண்ணில்
அனாதைகளாய்
ஆனார்கள்
தமிழ் நாட்டு
மண்ணில்
அகதிகளாய்
ஆனார்கள்

இனவெறி தாக்குதல்
இன்னமும்
அடங்கலியே
இலட்சம்பேரு
அழுதகுரல்
உலகத்துக்கு
கேக்கலியே

அவர்களை
தமிழர்களாய்
பார்க்க வேண்டாம்
குறைந்தபட்சம்
மனிதர்களாய்
பாருங்கள்

ஈழத்தமிழனின்
அழுகையை நிறுத்த
விஷப்பால்
கொடுத்தாள்
இந்தியத் தாய்

இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட
ஆணிகளைக்
கொண்டு
சிலுவையில்
அறையப்பட்டான்

ஈழத்தமிழன்
பிஞ்சு
குழந்தைகளின்
நெஞ்சை பிளந்தன
குண்டு மழை
கர்ப்பினிப்
பெண்களுக்கு
கட்டாய கருக்கலைப்பு

போர் நிறுத்த
நாடகத்தில்
அரசியல்
சகுனிகளின்
பகடைக் காய்களாய்
ஆனார்கள்
ஈழமக்கள்

இரைதேடும்
பறவைகூட
சாயும் காலம்
வீடுசெல்லும்
உறவை தேடும்
ஈழத்தமிழன்
எப்போது வீடு
செல்வான்

ஈழ மண்ணில்
புதைக்கப்பட்டு என்
தமிழர்கள்
விதைக்கப்பட்ட
விதைகளாய்
வெளியே
வருவார்கள்

தமிழ் ஈழம்
நனவாகும்
நாளும்வரும்
காற்றலையில்
தமிழோசை
கானம் வரும்...

Friday, March 20, 2009

தமிழ் பழமொழிகள்

அந்தி மழை அழுதாலும் விடாது
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

Tuesday, January 27, 2009

இலங்கையில் நடப்பது விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் அல்ல

இரத்த வெறி பிடித்த சிங்கள இன வெறியர்களின் தமிழின படுகொலை...

மனிதாபிமானம் இல்லாமல் போனது கொடுங்கோல் ராஜபக்ச மட்டும் அல்ல

ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும், இந்திய அரசியல் சுயநலவாதிகளும்தான்...

அப்பாவி தமிழ் சகோதர சகோதிரிகள் மீது உலக நாடுகளுக்கு உள்ள அக்கறை

கூட இந்திய தோழர்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

இந்தியாவில் தயாரான ஆயுதங்கள்தான் என் ஈழத் தமிழ் மக்களை வேரோடு அழிக்கும் விஷ குண்டுகளும் பீரங்கிகளும் ...

அய்யகோ !!! யாரேனும் காப்பாற்றுங்களேன்

எஞ்சியிருக்கும் சின்னஞ்சிறு பிஞ்சுகளையாவது..


Friday, January 9, 2009

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

Monday, January 5, 2009

Bharathi - Real Hero


தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?